சித்ரா பௌர்ணமி ரகசியங்கள் | இன்று ஒருநாள் கிரிவலம் சென்றால் எத்தனை அறிய பலன்கள் உண்டு தெரியுமா ?

 சித்ரா பௌர்ணமி ரகசியங்கள் 



"நெகிழ்ந்தேன், நிறைந்தேன், மீண்டேன்!"

பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீய சக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு இருந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்தது. இது சித்ரா பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று கோயில்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். சித்ரா பௌர்ணமி 2024 எப்போது அதன் முக்கியத்துவம் என்ன ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சித்ரா பௌர்ணமி 2024 : எப்போது?

சித்ரா பௌர்ணமி வரும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 23 இரவு 7.48 மணிக்கு பௌர்ணமி திதி முடிவடைகிறது. பொதுவாக ஒரு நாள் தொடங்கும் போது என்ன திதியில் தொடங்குகிறதோ அந்த திதியே நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே பௌர்ணமி திதி 22-ம் தேதி மாலையே தொடங்கினாலும் ஏப்ரல் 23-ம் தேதியே சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது. 


சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?

இந்த உலகின் பாவ புண்ணிய பலனை அறிய, சிவபெருமான் பார்வதி மூலம் தங்கப் பலகை கொண்டு வர சொல்லி அதில் சித்திரம் அமைத்தார். அதை பார்த்து வியந்த பார்வதி, இந்த சித்திரத்தை பேச வைக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து, அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து, அதற்கு சித்திர புத்திரன் என்று பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் சித்தா பௌர்ணமி நாளில் அவதரித்தார். அண்ட சராசரங்களில் உள்ள அனைவரின் பாவ, புண்ணிய கணக்குகளையும் தினமும் தனக்கு தெரிவிக்கும் படி உத்தரவு பிறப்பித்திருந்தார் சிவபெருமான். அதன்படி சித்திர புத்திரனார் எமலோகத்தில் இருந்து இருந்து கணக்குகளை எழுதி வருகிறார். எனவே இந்த நாளில் விரதமிருந்து அவரை வணங்கினால் அவர் மனிதர்களின் பாவக்கணக்குகளை குறைத்து நற்பலன்களை வழங்குவார் என்பது நம்பிக்கை.

சித்ரா பௌர்ணமி வழிபாடு

இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்தரை வணங்குவதன் மூலம் நம் எண்ணத்தில் பாவம் செய்யும் எண்ணம் நீங்கி புண்ணியம் செய்யும் குணம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் இந்த சித்ரா பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவதுடன், முருகனையும் அம்பாளையும் வழிபடுவதும் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி நாளில் வீட்டில் வழிபடுவதுடன், கோயிலுக்கு சென்று வழிபடுவதும் மிகவும் முக்கியம்.



இந்த நாளில் கோயில்களில் தெய்வங்களின் சக்தி அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் கோயிலுக்கு செல்வதால் அங்குள்ள நேர்மறை அதிர்வலைக நம் மீது படுவதால், அது நம் வாழ்விலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நமக்கு நல் வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு வேளை கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பௌர்ணமி பூஜை செய்து வழிபடலாம். வீட்டை முந்தைய நாளே சுத்தம் செய்து, பௌர்ணமி அன்று அதிகாலையில் வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து விளக்கேற்றி, சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். 

மேலும் சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் திங்கள் மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 23 இரவு 8 மணி வரை கிரிவலம் செல்லலாம். 

சித்திரை பெளர்ணமியின் சிறப்புகள்

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபத்தனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.

சித்ரா பெளர்ணமியில் தானம் செய்தால் சிறப்பு

இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தானம், தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

இந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும்.


இன்று ஒருநாள் கிரிவலம் சென்றால் எத்தனை அறிய பலன்கள் உண்டு தெரியுமா ?

மாதம் மாதம் வரும் பௌர்ணமி தினமானது இறைவழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் வருடம் ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமி தினமானது சித்தர்களின் ஆசி பெறவும், இறைவனை வழிபடவும் மிக சிறந்த ஒரு அற்புதமான நாளாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நன்னாளில் கிரிவலம் வருவதால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம் வாருங்கள்.

நமது உடலிற்கு சூரிய சக்தி எப்படி ஆற்றலை தருகிறதோ அதே போல சந்திர சக்தியும் ஆற்றலை தருகிறது. அதிலும் இறைவழிபாட்டிற்கு உரிய தலங்களான திருவண்ணாமலை, சதுரகிரி, பொதிகை மலை போன்ற தளங்களில் பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தோடு மூலிகை காற்றும் கலந்து வீசும் இதை சுவாசிப்பதன் மூலம் நமது உடலிலும் மனத்திலும் பல விதமான அற்புத மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த நிகழ்வானது முழு நிலவு தினத்தன்று மட்டுமே அதிக அளவில் நிகழ்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மாதம் மாதம் வரும் பௌர்ணமியை காட்டிலும் சித்ரா பௌர்ணமி அன்று இறை சக்தியின் ஆற்றல் அதிக அளவில் பூமியில் படர்கிறது. அதோடு பூமியில் இருந்து ஒருவித சக்தியும் எழும்புகிறது. இந்த சக்தியை தங்களுக்குள்ளும் கிரகித்துக்கொள்ள சித்தர்களும் யோகிகளும் சூட்சும வடிவில் கிரிவலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.

சித்ரா பௌர்ணமி அன்று குறிப்பாக திருவண்ணாமலையில் பல்லாயிரம் சித்தர்கள் ஏதோ ஒரு வடிவில் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. அதனால் எவர் ஒருவர் முழுமனதோடு சிவ சிந்தனையில் கிரிவலம் வருகிறார்களோ அவருக்கு சிவனின் அருளோடு சேர்த்து சித்தர்களின் பரிபூரண அருள் இன்று கிடைக்கும். அதே போல இன்று சித்தர்கள் வெளியில் வருவதால், சித்தர்களின் ஜீவ சமாதியில் விஷேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று சித்தர்கள் சமாதிக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி சித்தர்களை மட்டுமே மனதில் நிறுத்தி தியானம் செய்தால், ஏதோ ஒரு வடிவில் சித்தர்கள் நமக்கு காட்சி கொடுத்து அருளாசி புரிவார்கள் என்பது நம்பிக்கை.


சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வதோடு நிற்காமல், சிவ பக்தியில் மூழ்கி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதான வழங்கினால், நாம் கேட்டதை இறைவன் வழங்குவார். நமது எண்ணங்கள் ஈடேற சித்தர்கள் துணை நிற்பர். இதனால் திருவனாமலை, சதுரகிரி போன்ற திருத்தலங்களில் இன்று ஏராளமான அன்னதானங்கள் நடைபெறுவது வழக்கம். கிரிவலம் செல்ல இயலாதவர்கள் என்ன செய்யலாம்: முக்கிய பணி காரணமாகவோ, அல்லது உடல்நல குறைவு காரணமாகவோ இன்று பலரால் கிரிவலம் செல்ல இயலாமல் போகலாம். அது போன்ற சூழ்நிலையில் இன்று விரதம் இருந்து சித்ரகுப்தனையும், சிவனையும் போற்றும் மந்திரங்களை ஜபிக்கலாம். நம்மால் முடிந்த அளவு பசியால் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். அரசு பள்ளியில் ஏழ்மை சூழ்நிலையில் படிக்கும் பிள்ளைகளுக்கு பேணா, நோட்டு புத்தகங்கள் வாங்கி தரலாம். மாலை வேலை வரை விரதம் இருந்து முழு நிலவை பார்த்த பிறகு உணவு உண்ணலாம். இப்படி நம்மால் முடிந்த எத்தனையோ விதமான பிராத்தனைகளை நாம் இன்று செய்யலாம்.

மேலும் இது போன்ற தகவல்களை பற்றி அறிய செய்யவும் 

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே  உள்ள Link இய் செய்யவும் 

For the Latest Jobs Notifications: Click Here
Join With Us On WhatsApp: Click Here
Join With Us On Sharptron: Click Here
Join With Us On Telegram: Click Here
Join With Us On Facebook: Click Here
Join With Us On LinkedIn: Click Here