எப்போதெல்லாம் பொண்டாட்டி க்கு புருஷன் மேலே கோவம் வரும் தெரியுமா?


எப்போதெல்லாம் பொண்டாட்டி க்கு புருஷன் மேலே கோவம் வரும் தெரியுமா?


பாத்ரூம் லைட் நிறுத்தாம வரும்போது,

துவட்டிய ஈர துண்டை அப்படியே பெட்ல போடும்போது,

சாப்பிட்ட தட்டுல இருக்கிற waste ஐ dustbin ல போடாம அப்படியே sink ல போடும்போது,

அவங்க ஏதாவது தீவிரமா வேலை செஞ்சிட்டு வரும்போது நாம‌‌ மொபைல் நோண்டிட்டுருக்கும் போது,

எவ்வளவு ருசியா சமைச்சாலும் வாய் திறந்து பாராட்ட மனசு வராம ஓட்டலில் மாஸ்டரை பாராட்டும் போது,

ஏதாவது முக்கியமா பேசும் போது ஃபோனை நோண்டிக்கிட்டே பாதியா அரைகுறையா ம்ம்ம்ம்ம் ம்ம்ம் சொல்லுன்னு கேட்கும்போது,

மீறி கேட்டா காது கேட்டுக்கிட்டு தானே இருக்கு நீ பேசுன்னு னு புது விளக்கம் சொல்லும்போது,

அப்பாவை தான் பிடிக்கும் தெரிஞ்சும் கரெக்டா சண்டையில உங்கப்பன் இருக்கானேன்னு அவரை இழக்கும்போது,

வெளியே எங்கேயாவது போனா கரெக்டா போய் சேர்ந்துட்டேன்னு போன்ல சொல்லாம வீட்டில தவியாய் தவிக்க விடும்போது,

எவ்வளவு சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு சொல்ல வந்த விஷயத்தை புரிஞ்சிக்காம சொதப்பும்போது,

காலையிலிருந்து தேமேன்னு வீட்ல இருக்கிறாளேன்னு கண்டுக்காம ஆபீஸ் விட்டு வந்ததும் டிவி முன்னாடியே விழுந்து கிடக்கும்போது,

வாரம் முழுக்க வீட்ல அடைஞ்சி கிடக்கோம் ஞாயித்துகிழமை அந்நிக்காவது வெளிய போலாம்னா அன்னிக்கும் முக்கியமான மீட்டிங் னு ஓடும் போது,

பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு இருந்தா எந்த வேலையாக இருந்தாலும் ஓடி ஓடி போய் உதவி செஞ்சு வழியும்போது,

ஒரு நாளாவது பசங்களுக்கு வீட்டுபாடம் சொல்லி கொடுக்காம எல்லாத்துக்கும் நம்ம தலையிலேயே கட்டும்போது,

ஆறு மணிக்கு கிளம்ப வேண்டிய இடத்துக்கு அஞ்சு மணிக்கே கிளம்பி உட்கார்ந்து கிட்டு ‌
சீக்கிரம் சீக்கிரம் னு உயிரை வாங்கும்போது,

ஊர்ல இருக்கற பொண்ணுங்க எல்லாம் அழகி மாதிரியும் நாம மட்டும் ஏதோ ஒரு ஜந்து மாதிரி பார்க்கும்போது,

என் பொண்டாட்டி வாயே திறந்தாளே மூடமாட்டா, அவ இருக்காளே ன்னு வெளிய விட்டு கொடுக்கும்போது,

யோவ் என்னய்யா இன்னிக்கு அழகா இருக்கேன்னு கொஞ்சினா கண்டுக்காம
உதாசீனபடுத்தும்போது....